வீரகுள பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான சஞ்சீவ குமார எனப்படும் கணேமுல்லே சஞ்சீவ தொடர்பான விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார நேற்று (19) வீரகுள பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
கம்பஹா மேல் நீதிமன்றில் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்கு ஒன்று, சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேராவினால் நகர்த்தல் பத்திரம் மூலம் அழைக்கப்பட்டு, வீரகுள பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வீரகுல பொலிஸாருக்கு உத்தரவிடுமாறு கோரினார்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதி, சந்தேக நபரை ஆஜர்படுத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்காமல், அவரைப் பற்றிய அறிக்கையை மாத்திரம் உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.
இதன்போது வீரகுல பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என்பதுடன், அது தொடர்பில் வீரகுள பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்குமாறும் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய சந்தேக நபர், நேபாளத்தில் இருந்து போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி அண்மையில் வந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தொண்ணூறு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.