25.6 C
Jaffna
January 22, 2025
Pagetamil
மலையகம்

மரக்கிளை முறிந்து விழுந்து மாணவி பலி

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற பாடசாலை மாணவியின் தலையில் மரக்கிளை விழுந்ததால் அம்மாணவி உயிரிழந்துள்ளார் என பூண்டுலோய பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை – தவலந்தன்ன வீதியில் பூண்டுலோயா யா, பலுவத்த பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அக்கரபத்தனை பம்பரகெலே அபகன்லி தோட்டத்தில் வசித்து வந்த விஜயராஜ் திவ்யராணி (17) என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கண்டியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து தனது தந்தையுடன் அக்கரப்பத்தனை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த அசம்பாவிதத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மஸ்கெலியாவில் இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு

east tamil

கண்டி-மஹியங்கனை வீதி: போக்குவரத்து தடை

east tamil

நானுஓயாவில் குடும்ப தகராறு – ஒருவர் பலி

east tamil

மகிழுந்து-பேருந்து விபத்து

east tamil

மவுஸ்ஸாக்கலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து

Pagetamil

Leave a Comment