24.7 C
Jaffna
January 19, 2025
Pagetamil
குற்றம்

8 வயது மகளை இரக்கமின்றி அடித்த தாய் கைது!

தனது 8 வயது மகளை தடியால் தாக்கிய குற்றச்சாட்டில் 43 வயதுடைய தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சிறுமி நான்கு வெற்றிலைகளை பக்கத்து வீட்டு உறவினருக்கு கொடுத்ததால் தாய் தனது மகளை அடித்துள்ளார்.

ஒருகொடவத்தை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், தரம் 3 மாணவி ஒருவரை கதிரையில் அமர முடியாத வகையில் அவரது தாயார் தடியால் தாக்கியதாக பாடசாலை அதிபர் தொலைபேசியில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை பொலிஸாரிடம் அழைத்து விசாரணை நடத்தியதில், சிறுமி தோட்டத்தில் நான்கு வெற்றிலைகளை பறித்து, பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் ஒருவருக்கு கொடுத்ததே தாக்குதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர் சிறுமியின் பிட்டம், முதுகு மற்றும் தொடைகளில் தடியால் கொடூரமாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூன்று முறை திருமணம் செய்து கொண்ட நான்கு பிள்ளைகளின் தாய் எனவும் தாக்குதலுக்கு உள்ளான குழந்தை இரண்டாவது திருமணத்தின் கணவருக்கு பிறந்த பெண் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபருக்கு மூன்றாவது திருமணத்தில் மேலும் இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தாக்கப்பட்ட குழந்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

குழந்தையை கொடூரமாக சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளிநாடு சென்ற காதலன் தொடர்பு கொள்ளாததால் இளம்பெண் விபரீத முடிவு

Pagetamil

வவுனியா சிறைச்சாலை கூடா நட்பு: கணவனின் நண்பனுடன் பியர் குடித்த பின் நடந்த கொடூரம்!

Pagetamil

யாழ் யுவதியை பேய் கடத்தியதா?: பொலிசார் திண்டாட்டம்!

Pagetamil

போலி விசாவில் ஜேர்மனி செல்ல முயன்ற யாழ் நபர் சிக்கினார்!

Pagetamil

வீடு உடைத்து பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கி கொள்ளையடித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

Leave a Comment