தொழிலதிபர் ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்று வீட்டுக்குள் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்து பணம் மற்றும் தங்கம், கார், 3 இலட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் தங்கத்துடன் கொள்ளையடித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம், தலாவ, குமார எலிய பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் குருந்தன்குளம் மாத்தளை சந்தியில் வசிக்கும் 48 வயதுடைய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கணவரிடமிருந்து சட்டரீதியாகப் பிரிந்து பண்டாரவளையில் வியாபாரம் செய்து வரும் முறைப்பாட்டாளர், அனுராதபுரம் குருந்தன்குளம், மிஹிந்தலை ஆகிய பிரதேசங்களில் மளிகைச் சந்தை, உணவகம், அறை வாடகைக்கு இடமொன்றை நடத்தி வருவதாகத் தெரிவிக்கிறார்.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர், முறைப்பாட்டாளரின் உணவகத்திற்கு வந்த நபர் ஒருவர், வர்த்தகப் பெண்ணைக் கடத்திச் சென்று, அவரது கழுத்தில் கத்தியை வைத்து அவரது பணத்தையும் சொத்துக்களையும் கொள்ளையடித்துச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.