25.7 C
Jaffna
January 15, 2025
Pagetamil
கிழக்கு

பிரதி அதிபரை இட மாற்றக்கோரி சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி முன்பாக இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம்!

சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் விவசாயம் மற்றும் குளிர்சாதன தொழில்நுட்பம் ஆகிய கற்கை நெறிகளை மேற்கொள்கின்ற சுமார் 80க்கு மேற்பட்ட மாணவர்கள் நேற்றிலிருந்து சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்பாக பிரதி அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டுமென்று கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.இரண்டாவது நாளாக இன்றும் (12)ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி இரு கற்கை நெறிகளையும் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு எதிராக அவர் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும், பிரிதொரு தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து பதவி இறக்கம் செய்யப்பட்ட ஒருவராகவும் இவர் உள்ளார். ஆதலால், இவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அதிபர் பதவி ஆசை கொண்ட பிரதி அதிபரை கடந்த பரீட்சையினை வேறு தொழில்நுட்ப கல்லூரிக்கு மாற்றிய பிரதி அதிபரை, பரீட்சை மண்டபத்தில் மாணவர்களை துன்புறுத்திய பிரதி அதிபரை, கல்விசார் செயற்பாடுகள் பற்றிய குறித்த தெளிவின்மையினை உடைய பிரதி அதிபரை, மாணவர்களை அச்சுறுத்தி மன உளைச்சலுக்குட்படுத்தும் பிரதி அதிபரை பக்கச்சார்பாக செயற்படும் பிரதி அதிபரை, மாணவர்களுக்கு எதிராக இன முறுகளை ஏற்படுத்தும் பிரதி அதிபரை இப் பதவியிலிருந்து நீக்கி இப்பதவிக்கு ஆளுமையில் உடைய வேறு பிரதி அதிபரை நியமித்து தொழில்நுட்ப கல்லூரியின் வளர்ச்சிக்கு,மாணவர்களினால் கல்விசார் நடவடிக்கைகளுக்கு முன்னேற்றத்தில் ஏற்படுத்தித் தருமாறு ஆர்ப்பாட்டகாரர்கள் கேட்டுக்கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தொடர் மழையால் மட்டக்களப்பில் வயல் நிலங்கள் பாதிப்பு

east tamil

மக்களிடம் உதவி கோரிக்கை

east tamil

விரைவில் கிழக்கு மாகாணத்தில் வெள்ளம்

east tamil

அக்கரைப்பற்று புகைப்படக் கலை விழா- 2025

east tamil

கல்முனை-கொழும்பு சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

east tamil

Leave a Comment