ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள மாதா சிலையில் கண்களில் சிவப்பு திரவம் வடிகிறது.
இதனை அறிந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஹடட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் மாதா சிலையை தரிசித்து இரவு பகலாக வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த மாதா சிலை ஹட்டன் குடாகம பகுதியில் உள்ள கிறிஸ்தவ வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்துள்ளது.
மாதாவை வழிபடுவதற்காக சிறுவன் ஒருவன் சென்ற போது மாதா சிலையிலிருந்து சிவப்பு திரவம் கசிவதை கண்டு தாயிடம் கூறியுள்ளார்.
அதனை பார்த்த தாய் ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் பங்கு தந்தை நிவ்மன் பீரிஸிடம் அறிவித்துள்ளார்.
அங்கு இடத்திற்கு சென்ற பங்கு தந்தை சிலையை பார்வையிட்டார். தகவலறிந்து மக்கள் அங்கு குழுமியதால் இடநெருக்கடி ஏற்பட்டதையடுத்து, அந்த சிலையை கொண்டு வந்து மக்களின் தரிசனத்திற்காக தற்போது ஹட்டன் திருச்சிலுவை ஆலுயத்தில் வைத்துள்ளார்.
மாதா சிலையை பார்வையிடுவதற்கு ஹட்டன் மற்றும் பிற பிரதேசங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இரவு பகலாக வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் குறித்த ஆலயத்திற்கு ஹட்டன் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.