ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒருவர் இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பிலான இரண்டு விசாரணைகள் முடிவடைந்தவுடன், இறுதித் தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்னர், நாடாளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1