தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மட்டக்களப்பு வாழைச்சேனை புனானை பிரதேசத்திலுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அல்லது ஷரியா பல்கலைக்கழகத்தில் 6 கணினிகள் மற்றும் எண்பது மின் விளக்குகளை திருடி தப்பிச் சென்ற இராணுவ கோப்ரல் மற்றும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகந்த கடவத்மடுவ இராணுவம் மற்றும் பொலிஸ் வீதித்தடையில் வைத்து கைது செய்யப்பட்டதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
முப்பத்தைந்து வயதுடைய குறித்த இராணுவ கோப்ரல் நாவலடி இராணுவ முகாமில் ஏழாவது கெமுனு இராணுவப் படையணியில் பணிபுரிவதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்திற்குரிய கோப்ரல் பொல்கஹவெல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.
இந்த கணனிகள் மற்றும் கூரை விளக்குகளை வாடகை முச்சக்கர வண்டியில் கதுருவெலக்கு கொண்டு சென்று அங்கிருந்து பஸ்ஸில் கொழும்புக்கு கொண்டு செல்ல இராணுவ கோப்ரல் திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.