Pagetamil
விளையாட்டு

பந்தாடப்பட்டது பங்களாதேஷ்

2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் 13 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது இலங்கை.

கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் போட்டியில் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக ஆடிய சதீர சமரவிக்ரம 93 ஓட்டங்களை பெற்றதுடன் குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பங்களாதேஷ் அணி சார்பில் பந்து வீச்சில் ஹசன் மஹ்முட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 258 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

அந்த அணி சார்பில் டாவ்ஹிட் ஹ்ரிடோ அதிகபடியாக 82 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் தசுன் ஷனக, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன ஆகியோர் தலா 3விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

வெற்றியுடன் டிம் சவுதிக்கு பிரியாவிடை கொடுத்த நியூசிலாந்து!

Pagetamil

Leave a Comment