இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரியை மேலும் 4 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட பண்ட வரி செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் அடுத்த 4 மாதங்களுக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு 1 கிலோ கிராமிற்கு 50 ரூபா விசேட பண்ட வரியை இந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் அமுல்படுத்துவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
குறித்த வரி 6 மாத காலத்திற்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மேலும் 4 மாதங்களுக்கு நீடிக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோ கிராம் ஒன்றிற்கு 20 ரூபா என்ற விசேட பண்ட வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மார்ச் மாதம் முதல் உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்குது.