26.8 C
Jaffna
December 21, 2024
Pagetamil
கிழக்கு

அம்பாறை நகர சபை மைதானத்தில் டென்னிஸ் திடல் திறப்பு!

அம்பாறை நகர சபை மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட டென்னிஸ் திடல் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ச, அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) எச்.ஏ.என்.கே. தமயந்த விஜய சிறி, இலங்கை டென்னிஸ் சங்கத்தின் தவிசாளர் இக்பால் பின் இஸ்ஹாக் , இலங்கை இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி, உள்ளிட்ட அதிதிகள் இணைந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டெனிஸ் திடல் பெயர் பலகை திரைநீக்கம் செய்து வைத்தனர்.

அத்துடன் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG ) எச்.ஏ.என்.கே. தமயந்த விஜய சிறி உள்ளிட்ட அதிதிகள் டென்னிஸ் விளையாட்டு கூடத்தை பார்வையிட்டதுடன் டென்னிஸ் விளையாட்டிலும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வரவேற்புரை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு திடல் தொடர்பிலான பெட்டக காட்சி அத்துடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய டெனிஸ் திடல் அம்பாறை நகர சபை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டதுடன் டென்னிஸ் விளையாட்டு துறையின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் , கிழக்கு மாகாண முப்படை உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார் ,பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

இது தவிர டென்னிஸ் மைதானத்தை நிர்மாணிப்பதற்கான பணியாளர்களை இலங்கை இராணுவம் இலங்கை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் பங்களிப்புகளை வழங்கி இருந்தது.இந்த மைதானத்தை நிர்மாணிப்பதற்காக அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.ஏ.என்.கே. தமயந்த விஜய ஸ்ரீ முன்னின்று வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிராமசேவகர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

Pagetamil

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பணிப் புறக்கணிப்பு

east tamil

மியான்மார் அகதிகள் திருகோணமலையில்

east tamil

உபவேந்தர் கடத்தல் விவகாரம்: சி.ஐ.டி விசாரணைக்கு கருணா அம்மான்

east tamil

முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் மஜீத் காலமானார்.

east tamil

Leave a Comment