25.1 C
Jaffna
January 19, 2025
Pagetamil
கிழக்கு

திருகோணமலை: மனைவியின் கள்ளக்காதலால் விரக்தி; 6 வயது மகளுடன் புகையிரதத்தின் முன் பாய்ந்த கணவன்!

திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி நேற்று (06) பயணித்த இரவு அஞ்சல் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்த தந்தையும், மகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரவு 8.30 மணியளவில் கந்தளாய் பராக்கிரம மாவத்தை துமிரிய கடவைக்கு அருகில் புகையிரதத்தின் முன் பாய்ந்து இருவரும் தற்கொலை செய்ததாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய, உயிரிழந்தவர்களின் சடலங்கள் கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

கந்தளாய், பேராறு 02 பகுதியைச் சேர்ந்த 38 வயதான கணேசலிங்கம் திருவேந்திரன் மற்றும் அவரது 6 வயது மகள் திருவேந்திரன் கானா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கந்தளாய் ஆரம்ப வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு அவர் வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை அறிந்து மனவேதனை அடைந்து தனது மகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

east tamil

காரைதீவு நேரு சனசமூக நிலைய வருடாந்த ஒன்றுகூடலும், 75 ஆண்டு பவள விழாவும்

east tamil

ஓட்டமாவடி கூட்டுறவு சங்க புதிய அலுவலகம் திறப்பு விழா

east tamil

திருகோணமலையில் அதிகூடிய மழைவீழ்ச்சி

east tamil

காலநிலைமாற்றம்: கிழக்கு பாடசாலைகள் முடக்கம்!

east tamil

Leave a Comment