காலி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் ஒருவர் தனது பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 12 வயதுடைய மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதி அதிபரான 56 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தனது வீட்டில் கற்பித்தல் வகுப்புகளை நடாத்தி வருகின்றார். பாதிக்கப்பட்ட மாணவி 2 ஆம் திகதி காலை வகுப்பிற்கு சென்றுள்ளார். மாணவியைஅழைத்து வந்த அப்பா, சகோதரி வந்த பின்னர் வீடு திரும்புமாறு அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி மதியம் சுமார் 12.30 மணியளவில் வகுப்பு முடிந்து மற்ற மாணவர்கள் வெளியேற, அவர் மட்டும் தங்கைக்காக காத்திருந்தார். அப்போது, சந்தேக நபர், மாணவியை தனது அறைக்கு அழைத்துச் சென்று டீ, பிஸ்கட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மாணவி வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் தாயுடன் வந்து நடந்த சம்பவம் குறித்து பொலிசில் புகார் செய்தார்.
பொலிசார் சந்தேக நபரை கைது செய்ததுடன் சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளானர்.