நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய திடீர் சுகவீனம் காரணமாக நேற்று (2) கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
விருந்தில் குறிப்பிட்ட வகை உணவை சாப்பிட்டுவிட்டு, உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அந்த உணவில் விஷம் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
எனினும் அவரது உடல்நிலை மோசமாக இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற விருந்தொன்றில் வைத்து அவர் இந்த உணவை உட்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் அமைச்சர் உட்கொண்ட உணவை மேலதிக பரிசோதனைக்கு அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1