பயாகல ஹல்கந்தவில பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தின் பேரில் அவரது காதலன் என கூறிக்கொள்ளும் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி தொடந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவருடன் மூன்று மாதங்களாக உறவில் ஈடுபட்டிருந்த இச்சிறுவர், அவருடன் வீட்டை விட்டு ஓடிய போது வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தனது காதலனுடன் மதவாச்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் திஸ்ஸமஹாராமவிற்கு வந்து விடுதியொன்றில் தங்கியிருந்தபோது, வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள தங்குமிடத்தில் பொய்யான வயதைக் காட்டி, காதலியுடன் தங்கியிருந்த பின்னர், இருவரும் காலி தொடந்துவவில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த போது உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில் ஹிக்கடுவை பொலிஸில் சரணடைந்ததை அடுத்து பயாகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 26ஆம் திகதி வீட்டை விட்டு ஓடிய சிறுமி தனது காதலரை களுத்துறை நகரில் சந்தித்துள்ளார்.அதன் பின்னர் இருவரும் மதவாச்சிக்கு சென்று பின்னர் திஸ்ஸமஹாராம பகுதிக்கு வந்து வாடகை அறையில் தங்கியுள்ளனர்.
இருவரிடமும் போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தியதில், முகநூலில் அடையாளம் காணப்பட்டு, சுமார் 3 மாதங்களாக காதலித்து, தப்பி ஓட முடிவு செய்தது தெரியவந்தது.
சிறுமியின் தந்தை பயாகல பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் சந்தேகத்திற்குரிய இளைஞனை கைது செய்தனர்.
மாணவியின் தாய் வெளிநாடு சென்றுள்ளதாகவும், மாணவி தனது தந்தையுடன் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மாணவி களுத்துறை போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரான காதலன் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.