ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், மனித உரிமைகள் பேரவைக்கு தூதுக்குழுவை அனுப்பி, மனித உரிமைகள் பேரவையுடன் முட்டி மோதலில் ஈடுபடுவதில்லையென்ற முடிவுக்கு இலங்கை வந்துள்ளது.
வரவிருக்கும் கூட்டத் தொடரில் இலங்கை குறைந்த அணுகுமுறையைக் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் பொருட் செலவில் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு ஆளணியை அனுப்பியும், இலங்கை தொடர்பான பிரேரணைகளை தோற்கடிக்க முடியாது என்ற கசப்பான யதார்த்தத்தின் பின்னணியிலேயே அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது.
மனித உரிமைகள் பேரவை கடந்த ஆண்டு இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை நிறைவேற்றியது. உயர் ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையை கண்காணித்து அறிக்கையிடலை அதிகரிக்க வேண்டும் என்று தீர்மானம் கோருகிறது.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைகள் மீதான பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் தாக்கம் மற்றும் அதன் 53வது மற்றும் 55வது அமர்வுகளில் மனித உரிமைகள் பேரவைக்கு வாய்மொழியாக ஒரு புதுப்பிப்பை வழங்குவது,
மற்றும் அதன் 54வது அமர்வில் எழுதப்பட்ட புதுப்பிப்பு மற்றும் அதன் 57வது அமர்வில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான கூடுதல் விருப்பங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கை பற்றிஇம்முறை ஊடாடும் உரையாடலின் பின்னணியில் விவாதிக்கப்படும்.
புதிய தீர்மானத்தின் உள்ளடக்கம் பெரும்பாலும் முந்தைய 46/1 தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டது. இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகள் குறித்த சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையை நடைமுறைப்படுத்த மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு அது அழைப்பு விடுக்கிறது. இலங்கையில் மனித உரிமைகள் மீதான பொருளாதார நெருக்கடியின் தாக்கம் குறித்து ஆராயவும் முயல்கிறது.
அரசாங்கம் இம்முறை எந்தவொரு உயர்மட்ட தூதுக்குழுவையும் மனித உரிமைகள் பேரவைக்கு பரப்புரைக்கு அனுப்பாது என அறிய முடிகிறது. அந்தந்த நாடுகளுடன் தொடர்புகொள்வதற்கு ஜெனீவாவிலுள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியின் கைகளில் அதை விட்டுவிடுகிறது. எவ்வளவு பிரயத்தனப்பட்டும், ஐ.நா அமைப்பின் எந்தவொரு தீர்மானத்தையும் தோற்கடிப்பதற்கு தேவையான எண்ணிக்கையைப் பெற முடியாது என்ற யதார்த்தத்திற்கு அரசாங்கம் வந்துள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகளை ஆராய, தற்போதுள்ள பொருத்தமான ஒரேயொரு வழியான- வெளிநாட்டின் தலையீட்டைக் கோரும் தீர்மானத்தை அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்துள்ளது.
அடுத்த அமர்வு செப்டம்பர் 11 ஆம் திகதி தொடங்கி ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை தொடரும். இலங்கை விவகாரம் செப்டம்பர் 11 ஆம் திகதி விவாதிக்கப்படும்.