யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில், பட்டா வாகனம் தீப்பிடித்ததில் எரிந்து நாசமாகியுள்ளது.
மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.
பருத்தித்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த பொருட்கள் ஏற்றும் பட்டா வாகனமே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1