மனவளர்ச்சி குன்றிய யுவதி ஒருவரை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் 12 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரிதிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த கூட்டு வன்புணர்வு சம்பவம் 2011 ஆம் ஆண்டு பதிவாகியிருந்தது.
ரிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தகொல்ல மீகஸ்தென்ன பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்று புலத்கொஹுபிட்டியவில் வேறு பெயரில் வசித்து வந்துள்ளார்.
மாத்தளை யடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய திருமணமாகாத யுவதியை அதே கிராமத்தில் வசிக்கும் நான்கு நண்பர்களுடன் சேர்ந்து சந்தேகநபர் கூட்டு வன்புணர்வு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட போது அவர்கள் 24 மற்றும் 25 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது, முக்கிய சந்தேகநபர், யடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவருக்கு எதேச்சையாக வந்த தொலைபேசி அழைப்பின் ஊடாக நட்பை ஏற்படுத்தி, இப்பாகமுவைக்கு சந்திப்புக்கு வருமாறு கூறியுள்ளார்.
தன்னுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த யுவதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை அறியாத சந்தேக நபர், குறித்த யுவதியை அப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்று தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து மறுநாள் விடியும் வரை கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்.
மறுநாள் வீடு திரும்பிய யுவதி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் அளித்த புகாரின் பேரில், கூட்டு பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், பொலிஸாரிடம் சிக்கிக் கொள்வோம் என்ற அச்சத்தில் பிரதேசத்தை விட்டுத் தப்பி புலத்கொஹுபிட்டியவில் வசித்து வந்துள்ளார்.
ஏறக்குறைய 12 வருடங்களாக வேறு பெயரில் வாழ்ந்து வந்த சந்தேக நபர், சட்டவிரோதமாக 2 திருமணத்தையும் செய்துள்ளார். அவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லை, சந்தேக நபருக்கு இரண்டாவது திருமணத்தில் குழந்தை இருந்ததாக கூறப்படுகிறது.
சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த வன்புணர்வு சம்பவம் தொடர்பில், ரிதிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஹேமந்த சுபசிங்க, ஓ.ஐ.சி.யாக நியமிக்கப்பட்டதன் பின்னர், விசாரணைகளை ஆரம்பித்து, அரச புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர் ஊடாக சந்தேகநபர் தொடர்பான தகவல்களை அறிய முடிந்தது.