மதுரை ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
லக்னோ – ராமேஸ்வரம் சுற்றுலா ரயில் மதுரையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ரயில் பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் மேலும் உயிரிழந்தவர்கள் விவரங்கள் தெரியவில்லை. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தால் தீ மளமளவென எரிந்தது. முதல்கட்ட தகவல்படி சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சுற்றுலா ரயில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளி நிக்கவைக்கப்பட்டிருந்தது. இதில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரம் சுற்றுலா வந்த பயணிகளில் சிலர் அதிகாலையில் தேநீர் சமைக்க முயன்ற போது சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா ரயில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளி நிற்க வைக்கப்பட்டிருந்தது.
இரண்டு பெண்கள் உட்பட எட்டு பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ரயில் விபத்து நடந்த இடத்தில் மதுரை ஆட்சியர் சங்கீதா, ரயில்வே கோட்ட மேலாளர் ஆகியோர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ரயிலில் தீ பற்றியதற்கான காரணம் முழுமையான விசாரணைக்கு பிறகே தெரிய வரும். எனினும் பயங்கர தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது