26.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

அமர்தலிங்கத்தின் 96வது பிறந்தநாள் நிகழ்வு

முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 96வது பிறந்த தினத்தை முன்னிட்டு வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலில் அமைந்துள்ள அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் திருவுருவசிலை வளாகத்தில் பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பண்ணாகம் அண்ணா கலைமன்றத்தினரால் விசேட நிகழ்வுகள் இன்று காலை 7 மணியளவில் முன்னெடுக்கபட்டது .

இதன்பொழுது நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் வட்டுக்கோட்டை தொகுதி தமிழரசுக் கட்சி தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவனால், அமிர்தலிங்கத்தின் 96 வது பிறந்ததினத்தை முன்னிட்டு கேக்வெட்டி, அமிர்தலிங்கத்தின் திருவுருவசிலைக்கு மலர்மாலையும், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பண்ணாகம் அண்ணா கலைமன்றத்தினர், பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி மகளீர் அணிசெயற்பாட்டாளர் பரமானந்தவள்ளி, பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1989ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் அமிர்தலிங்கம் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விமானத்திற்குள் உயிரிழந்த இலங்கை பெண்

east tamil

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி

east tamil

கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தியில் பின்னடைவு – சிவஞானம் சிறீதரன்

east tamil

பதுளைக்கு விஷேட ரயில் சேவை

east tamil

அஸ்வெசும நலன்களுக்கு நிலுவைத் தொகை இன்று முதல் வங்கி கணக்குகளில்!

east tamil

Leave a Comment