வெலிக்கடையில் பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜன் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையின் தீர்ப்பை வழங்கும் போதே, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுலுவல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1