சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட நோயுற்ற பிக்குகள் மற்றும் சாதாரண பிக்குகள் வாழும் வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் நேற்று இரண்டாவது முறையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக திம்புலாகல புத்த ஸ்ராவக சங்க சபையின் பதிவாளர் திம்புலாகல ராகுலாலங்கர தேரர் தெரிவித்தார்.
1954 ஆம் ஆண்டு முதல் திம்புலாகல ஆரண்ய சேனாசனத்திற்கு மின்கட்டண சலுகை வழங்கிய ஆட்சியாளர்கள், இந்த ஆண்டு இரண்டாவது மின்வெட்டால் யானை, புலி, கரடிகளுக்கு மத்தியில் வாழும் தமது ஆரண்ய சேனாசனா பிக்குகளின் வாழ்க்கை பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதாக ராகுலலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.
திம்புலாகல ஆரண்ய சேனாசன சுமார் 57 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. இதை செலுத்த தம்மிடம் போதிய ஆதரவோ, பணமோ இல்லை. இந்நிலையைக் கருத்தில் கொண்டு தமக்கு சலுகை வழங்குமாறும், ஏனைய விகாரைகளைப் போன்று தமது விகாரைகளுக்கு நன்கொடை வழங்குவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் திம்புலாகல ஆரண்ய சேனாசனத்திற்கு மாதாந்தம் சுமார் ஒரு இலட்சம் மின்சாரக் கட்டணம் இருந்த போதிலும், மின் கட்டண உயர்வால் தற்போது 2 இலட்சம் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.