இலங்கை போக்குவரத்து சபையின் தியசென்புர டிப்போவின் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தியசென்புர டிப்போவில் பேருந்து நடத்துனரிடம் இருந்து 60,000 ரூபா இலஞ்சம் பெறச் சென்ற போதே நேற்று (24) மெதிரிகிரிய விஹார மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காதது தொடர்பான விசாரணையின் போது பேருந்து நடத்துனரை விடுவிக்க இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத்திற்குரிய தியசென்புர டிப்போவின் பொறுப்பதிகாரி பொலன்னறுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1