சீரியல் நடிகை சந்தியா ஜகர்லமுடி சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில் பூமிகா கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்திருந்தார். அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில வருடங்களுக்கு முன்பு தன்னை யானை தாக்கியது குறித்து கண்ணீரோடு பேசி இருக்கிறார்.
சன் டிவியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் பெரிய அளவில் ஹிட்டான வம்சம் சீரியலில் பூமிகா கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் நடிகை சந்தியா ஜகர்லமுடி. இவர் இந்த சீரியலில் மட்டுமல்லாமல் சந்திரலேகா போன்ற சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் அதிகமான சீரியல்களில் நடிக்காமல் இருக்கும் சந்தியா தெரு நாய்களை பாதுகாத்து வரும் பணியை செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான நிகழ்வுகள் குறித்து பேசி இருக்கிறார்.
“அப்போது 2006 ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் “செல்லமடி நீ எனக்கு” டைட்டில் பாடல் எடுக்கும் போது கோயில் யானையுடன் சூட் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அது என்னை தாக்கியது. ஆனாலும் இதுவரை எனக்கு அந்த யானை மீது எந்த கோபமும் இல்லை. அந்த யானை தாக்கியதால் எனக்கு ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சில பாகங்களையும் அகற்ற நேர்ந்தது. யானை என்னை தாக்கியதும் நான் மயக்கி விட்டேன். உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் தான். யானை என் மீது கால் வைத்தது என்று நினைத்தேன் ஆனால் அது தும்பிக்கையில் என்னை நசுக்கியது.
என்னால் வலி தாங்க முடியாமல் நான் துடித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு சிலர் என்னை தூக்கிக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவருமே டான்ஸர்கள் தான். அதில் ஒரு தயாரிப்பாளரும் இருந்தார். ஆனால் அவர் இப்போது இல்லை இறந்து விட்டார்.
அப்போது என்னை தூக்கிக் கொண்டு போன டான்ஸர்களின் ஒருவன், நான் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு உதவி செய்வது போல நடித்து என்னுடைய மார்பை பிடித்து சுகம் கண்டு கொண்டிருந்தான்.
என் வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்றால் அதை தான் நான் சொல்வேன். அந்த நேரத்துல நான் கிட்டத்தட்ட பிணம் மாதிரி தான் இருந்தேன். பிணத்தை கூடவா இப்படி செய்வாங்க. என்னை தூக்கி செல்லும்போது என் மார்பில் கை வைத்த அந்த டான்சர் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் அதை நான் உணர்ந்தேன். அதை இதுவரைக்கும் எங்க அம்மா கிட்ட கூட நான் சொல்லவில்லை. அந்த நேரத்தில் நான் இருந்த நிலைமையை பார்த்து என்னுடைய அம்மா மனம் உடைந்து போயிருந்தார். அவரிடம் இதை எப்படி சொல்வது. அவங்களுக்கு அப்போ தமிழ் கூட தெரியாது. அந்த நேரத்தில் கும்பகோணத்தில் நான் ரொம்பவே தவித்துப் போனேன். அதிலிருந்து மீண்டு வர எனக்கு ரொம்ப நாளாச்சு என்று கண்ணீரோடு பேசி இருக்கிறார்.