ஆசிரியரான கணவர் தினமும் 7 முறை உடலுறவு கொள்வதாக குறிப்பிட்டு, இளம் பெண்ணொருவர் விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மட்டக்களப்பில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் கிராமமொன்றை சேர்ந்த இளம் பெண் தாக்கல் செய்த இந்த வழக்கு, கடந்த வாரத்தில் முதல்முறையாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.
25 வயதான பெண் திருமணமான 5வது மாதத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
31 வயதான கணவர் ஆசிரியராக பணிபுரிகிறார்.
பாடசாலையால் வீடு வந்ததில் இருந்து, மறுநாள் காலையில் பாடசாலை செல்வதற்கு இடையில் தினமும் சராசரியாக 7 முறை உடலுறவு கொள்வதாகவும், இந்த கொடுமைக்கு தான் எதிர்ப்பு தெரிவித்தபோது, தாக்கி பலவந்தமாக உடலுறவு கொள்வதாகவும், கணவனின் கொடுமையிலிருந்து தப்பித்து, தற்போது பெற்றோருடன் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டு விவாகரத்து கோரியுள்ளார்.
இதேபோல, கடந்த வாரம் மட்டக்களப்பில் மற்றொரு முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியிலிருந்து இன்னொரு வித்தியாசமான விவாகரத்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
18 வயதான பெண்ணொருவர், தனக்கும் கணவருக்குமிடையில் திருமணமாகி ஒன்றரை வருடங்களாகியும் உடல்ரீதியான தொடர்பில்லையென குறிப்பிட்டு விவாகரத்து கோரியுள்ளார்.
32 வயதான கணவர் வர்த்தகர்.
அவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்களாகின்ற போதும், கணவர் தன்னுடன் உடல்ரீதியான தொடர்பு வைக்கவில்லையென குறிப்பிட்டு விவாகரத்து கோரியிருந்தர்.
இந்த வழக்கும் கடந்த வாரமே முதல்முறையாக விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.