யாழ்ப்பாணம், வடமராட்சி, கற்கோவளம் பகுதியிலுள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாமென தெரிவித்து சிலர் இன்று (14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தம்மை அந்த பிரதேசவாசிகள் என குறிப்பிட்ட சிலர், இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என்று, இராணுவ முகாமின் முன்பாக சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கற்கோவளம் இராணுவ முகாம் தனியார் காணியில் அமைந்துள்ளது. அந்த காணியை மீளளிக்க வேண்டியிருப்பதால்,இராணுவ முகாமை அகற்றும் முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனவும், காணியை மீளளிப்பதற்காக ஒப்படைப்பதெனில் அருகிலுள்ள அரச காணியில் இராணுவ முகாமை அமைக்குமாறும் அவர்கள் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1