26.1 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை

முல்லைத்தீவு மனிதப்புதைகுழியை தொல்லியல் திணைக்களம் பார்வையிடும்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி. பிரதீபன் தலைமையில் இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணையினை எதிர்வரும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதுடன் சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று கள ஆய்வினை மேற்கொண்டு அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து நிதி கிடைக்க இருப்பதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொல்பொருள் திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்கத்தின் பிரதிநிதிகள் சேர்ந்து 10 ஆம் திகதி சந்தேகத்திற்கு இடமான பிரதேசத்தினை அளவிட்டு அதற்கான கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் அகழ்வுப் பணிக்கான திகதியும் தீர்மானிக்கப்படவுள்ளது.

இதில் தொல்பொருள் திணைக்களம் முன்னிலையாகாத நிலையில் நாளை மறுதினம் எதிர்வரும் 10 ஆம் திகதி நேரில் பார்வையிட்டு மூன்று வார காலம் கேட்டு இது தொடர்பிலான பாதீட்டினை நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதிமன்றுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலையில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்.

east pagetamil

சம்பூரில் பாலியல் துஷ்பிரயோகம் – பூசாரிக்கு 30 வருட கடூழிய சிறை!

east pagetamil

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைப்பு!

Pagetamil

நெற்றிக் கண்ணைத் திறத்தல்

Pagetamil

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் இறுதியானது!

Pagetamil

Leave a Comment