27.2 C
Jaffna
April 5, 2025
Pagetamil
இலங்கை

பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம் 7 வது நாளாக தொடர்கிறது.

கிளிநொச்சி பூநகரி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலைக்கு எதிரான மக்கள்
போராட்டம் இன்று (09) 07 வது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு
வருகிறது.

அனைத்து மக்கள் ஒன்றியத்தால் மூன்று கிராமங்களான வேரவில், வலைப்பாடு,
கிராஞ்சி ஆகிய கிராமங்கள் இனைந்து சீமெந்து தொழிற்சாலைக்கு எதிர்பாக
நடாத்தும் சுழற்சி முறையிலான கவன ஈர்ப்பு போராட்டாத்தின் ஏழாவது நாள்
போராட்டமானது வேரவில் வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்று வருகிறது.

பொன்னாவெளி எனும் பழமைவாய்ந்த கிராமத்தில் சீமெந்து தொழிற்சாலைக்கான
சுண்ணக்ககல் அகழ்வை மேற்கொள்வதற்கு டோக்கியோ சீமெந்து நிறுவனம் ஆய்வுகளை
மேற்கொண்டு பணிகளை முன்னெடுக்கவுள்ள நிலையில் பொதுமக்கள் அதற்கு
எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை
மேற்கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான கவனயீர்ப்பு
போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கடற்கரைக்கு அருகில் உள்ள கிராமங்களில் சுமார் 300 மீற்றர் வரையான
ஆழத்தில் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படும் போது அதன் விளைவாக தங்களது
கிராமங்களுக்குள் கடல் நீர் உள்வரும் எனவும் அதனால் கிராம மக்கள்
கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் தெரிவிக்கும்
பொதுமக்கள், தொழிற்சாலை கழிவுகள் காரணமாக மோசமான நோய்த்தாக்கங்களுக்கும் பொது மக்கள் முகம் கொடுக்க வேண்டிய சூழல் நிலைகள் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக கடற்கரையில் அமைந்துள்ள தங்களது கிராமங்களில் சுண்ணக்கல்
அகழ்வு நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்து
கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை மனு நிராகரிப்பு

Pagetamil

பூசா சிறையில் கைதி கொலை

Pagetamil

போத்தல் குடிநீருக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

Pagetamil

15 வயது மாணவி கூட்டாக சீரழிப்பு: 7 பேர் கைது!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல்: நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!