27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

கஜேந்திரகுமார் தரப்பை தமிழ் தேசத்திலிருந்து ‘அகற்றினால்’தான் தீர்வு சாத்தியம்: ஈ.பி.டி.பி மிரட்டலா?

தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்கின்ற அல்லது கிடைக்க வருகின்ற சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றையும் குந்தகம் விளைவித்து அதில் தமது சுயலாபம் கண்டுவரும் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் குழுவினர்தான் தமிழ் மக்களின் மிகப்பெரும் துரோகியாகவும் துயராகவும் இருந்துவருகின்றது என  ஈபிடிபியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

அத்துடன், கஜேந்திரகுமார் தரப்பை தமிழ் மண்ணிலிருந்து அகற்றினால்தான் தீர்வு சாத்தியம் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (04) ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த ஶ்ரீரங்கேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ் மக்களது இனப் பிரச்சினைக்கு அல்லது அரசியல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் ஏதாவது ஒரு சாட்டுப் போக்கு காட்டி குந்தகம் ஏற்படுத்தி தாங்கள் மட்டும்தான் தமிழ் தேசியவாதிகள் என கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் குழுவினர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் சரி அதற்கு பின்னால் காலத்திலும் சரி தமது சுய இலாபங்களை மட்டுமே முதன்மையாக கொண்டு இன்னொரு தரப்பினரது நிகழ்ச்சி நிரலுக்காக ஓலமிட்டு வருகின்றனர்.

இன்று சமஸ்டி தான் தமிழருக்கு வேண்டும் என்று ஊடகங்களில் ஓலமிடும் இவர்கள் தமது கட்சியின் யாப்பில் தமது கொள்கையாக ஒற்றை ஆட்சியின் கீழ் தான் இலங்கை தீவு இருக்கும் என்பதை துல்லியமாக வலியுறுத்தி இருக்கின்றார்கள். இத்தகையவர்கள் தமிழ் மக்களுக்கு இன்று சமஸ்டி முறையிலான தீர்வை கோருவது எந்தப் பொறிமுறையில் அமையவேண்டும் என்பதை அவர்கள் தெளிவுபடுத்துவார்களா?

இதேவேளை அன்று மலையக தமிழ் மக்களுக்கு குடியுரிமையை அன்றைய ஆட்சியாளர்கள் பறித்தபோது அதற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்த கஜேந்திரன் குமார் பொன்னம்பலத்தின் பேரன் ஜீ.ஜீ.பொன்னம்பலம் மற்றும் அதே கட்சியை சேர்ந்த மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் வி. குமாரசுவாமி ஆகியோர் வாக்களித்து மலையக தமிழ் மக்களின் பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்தனர். அதற்கு கைமாறாக அன்றைய ஆட்சியில் கைத்தொழில் அமைச்சை குமார் பொன்னம்பலமும் இராஜாங்க அமைச்சை குமாரசுவாமியும் இலஞ்சமாக பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு மிகப்பெரும் துரோகத்தை செய்தனர்.

தற்போது கூட ஒற்றையாட்சிக்கு கீழ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 13 ஆவது அரசியலமைப்பின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களில் முதல்வராகவும் தவிசாளர்களாகவும் உறுப்பினர்களாகவும் உறுதிப்பிரமாணம் செய்து அங்கம்வகித்துக்கொண்டு பின்னர் 13 ஆவது அரசியலமைப்பை தென்னிலங்கை இனவாதக்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாதக அவர்களுடன் இணைந்து எதிர்ப்’பாதாக மக்களை அடிமுட்டாளாக்ககின்ற இழிவான அரசியலை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் கஜேந்திரமாரது குழுவினர்தான் தமிழ் தேசத்தின் மாபெரும் துரோகிகள் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் சுயநலத்துக்காக யாருடன் ஒட்டி விட வாடவில்லை. எமது தேவைகளுக்காக எவரிடமும் மண்டியிடப் போவதுமில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக மட்டுமே தென் இலங்கையை அரசிடம் நாம் அரசியல் இணைக்கப்பாட்டை ஏற்படுத்தி வருகின்றோம்

எமது அரசியல் நிலைப்பாடு தான் சரி என்பதை இன்று கஜேந்திரகுமாரே ஏற்றுக்கொண்டுள்ளார். சமஸ்டி என்பது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் கட்சி என்பதற்குள் தான் பிணைந்துள்ளது. இதைத்தான் கஜேந்தரகுமார் குழுவினருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் “கஜேந்திரகுமாருக்கு மட்டும் தான் சமஸ்டி சொந்தமல்ல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் மக்கள் ஆணை உள்ளது என தெளிவாக எடுத்துரைத்திருந்தார்.

இதனை பொறுத்தக்கொள்ள முடியாத கஜேந்திரகுமார் குழு எம்மீது வழமைபோன்று அவதூறுகளையும் சேறுபூசல்களையும் மேற்கொள்ள முனைந்தள்ளது.

அந்தவகையில் தமிழ் மக்களுக்கு இன்று அன்பு தொடக்கம் இன்று வரை மாபெரும் துரோகத்தைச் செய்து வரும் கஜேந்திரகுமார் குழு யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இணைப்பேராசிரியர் ரிச்சர்ட் பிரியோ நூலக நிறுவனத்துக்கு வருகை

east pagetamil

‘பைத்தியக்காரன் அர்ச்சுனாவை வெளியேற்றுங்கள்’: யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சலசலப்பு!

Pagetamil

யாழ் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்!

Pagetamil

தாதியர் பயிற்சிக் கல்லூரி புத்தர்சிலை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது: கோ.கருணாகரம்

Pagetamil

குருக்கள்மடத்தில் வாகன விபத்து: மூவர் வைத்தியசாலையில் அனுமதி

east pagetamil

Leave a Comment