நீர்வேலி மூத்தவிநாயகர் கோயில் திருவிழாவில் தங்கநகை திருட்டில் ஈடுபட்ட 4 பெண்கள் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் இந்திய பெண்.
இந்த ஒழுங்கமைக்கப்பட்ட நகைத்திருட்டு கும்பல் நாடு முழுவதிலும் உள்ள முக்கிய கோயில்களில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்கச் சென்று பெண்களிடம் தங்க நகைகளை பறிப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமை (31) இவர்கள் கைது செய்தனர்.
கைதன இந்திய பெண் கடந்த மார்ச் மாதம் சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்ததாகவும்,செப்டெம்பர் மாதம் வரை இலங்கையில் தங்குவதற்கு விசா கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கோயில் திருவிழாக்களின் போது நகைத் திருட்டில் ஈடுபட்டபோது, இந்திய பெண்ணும் உள்ளூர் பெண்களும் அறிமுகமாகி, அதன்பின் இணைந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்த இந்தியப் பெண் நகைகளை பறிப்பதற்காகவே இலங்கைக்கு வந்ததாகவும், அவருடன் மேலும் சிலரும் இலங்கைக்கு வந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நீர்வேலி முத்தவிநாயகர் கோயில் திருவிழா நடைபெறும் இடத்தில் பெண்ணொருவரின் 600,000 ரூபா பெறுமதியான தாலிக்கொடியை சந்தேக நபர் ஒருவர் பறிக்க முற்பட்டுள்ளதாகவும் பெண் சத்தமிட்டதையடுத்து, பிரதேச மக்கள் இணைந்து திருட்டில் ஈடுபட்ட பெண்களை மடக்கிப்பிடித்தனர்.
திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்ட போதும், தாலிக்கொடி மீட்கப்படவில்லை. அது மற்றொரு திருடியிடம் கொடுக்கப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது.