தனது மனைவி கள்ளக்காதலனுடன் முச்சக்கர வண்டியில் இருப்பதை அவதானித்த கணவன், முச்சக்கர வண்டிக்கு தீ வைத்துள்ளார்.
முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தவரை கைது செய்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவரின் மனைவி ஹொரணை பிரதேசத்தில் உள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிகிறார். அவர் இன்று அதிகாலை வேலைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி ஹொரணை பிரதேசத்தில் உள்ள வீதியொன்றுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் தனது கள்ளக்காதலனுடன் உட்கார்ந்து சல்லாபித்துக் கொண்டிருந்துள்ளனர்.
கணவன் தகவலறிந்து அங்கு சென்றுள்ளார். கணவர் வருவதைக் கண்டு மனைவி, கள்ளக்காதலனையும் அழைத்துக் கொண்டு முச்சக்கரவண்டியை விட்டு தப்பியோடினார்.
அந்த ஜோடி வீதியால் தலைதெறிக்க தப்பியோடியதை பிரதேசவாசிகள் வேடிக்கை பார்த்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1