இலங்கையில் திருமணத்துக்கு புறம்பான கள்ளக்காதல் உறவுகள் வருடாந்தம் அதிகரித்து செல்வது பொலிஸ் புள்ளிவிபரங்களில் தெரிய வந்துள்ளது.
கடந்த வருடம் (2022) திருமணத்துக்கு புறம்பான உறவுகளினால் ஏற்பட்ட குடும்பத் தகராறுகள் தொடர்பாக 9636 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயல்திறன் அறிக்கையில் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில், திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் காரணமாக 9250 குடும்பத் தகராறுகள் பதிவாகியுள்ளன.
2021 ஆம் ஆண்டை விட 2022 இல் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் காரணமாக குடும்ப தகராறுகளின் எண்ணிக்கை 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், 2022ஆம் ஆண்டில் குடும்பத் தகராறு தொடர்பாக 111709 வெவ்வேறு புகார்கள் பதிவாகியுள்ளன. இது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 06 வீத அதிகரிப்பாகும். 2021 ஆம் ஆண்டில், குடும்பத் தகராறு தொடர்பாக 105469 வெவ்வேறு புகார்கள் பதிவாகியுள்ளன.
2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு வருடங்களிலும் குடும்ப வன்முறை தொடர்பான, குடும்ப தகராறுகள் தொடர்பான புகார்களும் அதிகரித்துள்ளன.