கடந்த வாரம் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளக
விளையாட்டரங்கில் இடம்பெற்ற வடக்கு மாகாண கராத்தே போட்டியில் கிளிநொச்சி
மருதகநர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணனும் தங்கையும் தங்க பதக்கங்களை
வென்றுள்ளனர்.
கிளிநொச்சி பொது உள்ளரங்க விளையாட்டரங்கில் நடைபெற்ற வடமாகாண கராத்தே
போட்டியில் கலையமுதன் சௌபர்ணிகா 11வயதுக்குட்பட்டோருக்கான காட்டா
போட்டியில் தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.
இதேவேளை வடமாகாண கராத்தே போட்டியில் கலையமுதன் பரிதிகன்
21வயதுக்குட்பட்டோருக்கான ‘குமிதி’ போட்டியில் தங்கப்பதக்கத்தையும் ,
‘காட்டா’ போட்டியில் வெண்கலப்பதக்கத்தையும் வென்றார்.
இவர் லவன் மாஸ்டரின் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சென்ற வருடம் நடைபெற்ற க.பொ.த.சாதாரனப்பரீட்சையில் 9 பாடங்களிளும் A சித்தியைப்பெற்றவர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1