பொலிஸாரின் உத்தரவை மீறி தெற்கு அதிவேக வீதியில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபருக்கு மத்துகம பிரதான நீதவான் ஐம்பத்தி இரண்டாயிரத்து ஐநூறு ரூபா (52500) அபராதம் செலுத்துமாறும், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை ஒரு வருடத்திற்கு இடைநிறுத்துமாறும் உத்தரவிடப்பட்டார்.
மத்துகம நாரவில பகுதியைச் சேர்ந்த கலங்விதுரகே குணரத்ன என்ற நபருக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18அம் திகதி இரவு 9.50 மணியளவில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொட இடைமாற்றில், மாத்தறை நோக்கி அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.
பொலிசார் துரத்திச் சென்று மோட்டார் சைக்கிளுடன் சாரதியை கைது செய்துள்ளனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் வாகன ஓட்டி குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1