26.4 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

மாயமான 17 வயது சிறுமியை தேடும் பொலிசார்

இந்த வருடம் ஜூன் மாதம் 17 ஆம் திகதி முதல் காணாமல் போன 17 வயது யுவதியைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தனது மகள் காணாமல் போனமை தொடர்பில் சிறுமியின் தந்தை நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன சிறுமி, நீர்கொழும்பு சீதுவ லியனகேமுல்ல பகுதியைச் சேர்ந்த காயத்திரி தேவ்ஷானி சூரியசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காணாமல் போன சிறுமியின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டது, அவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியது.

அதற்கமைவாக, குறித்த சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் 0718591630 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது நீர்கொழும்பு பொலிஸாருக்கு 031222227 என்ற இலக்கத்திலோ தொடர்பு கொள்ளுமாறு அவர்கள் கோருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மோப்ப நாய்களுடன் கிளிநொச்சிப் பொலிசார் வீதிச் சோதனை

Pagetamil

வேலணை மக்களுக்கு அதிர்ச்சிச் செய்தி: 24 மணித்தியால மருத்துவ சேவை தடைப்படும் அபாயம்!

Pagetamil

ஐயப்பன் பக்தர்களுடன் பிரதமர் ஹரிணியை சந்தித்தார் செல்வம் அடைக்கலநாதன்

Pagetamil

கொதித்தெழுந்த சிவாஜி!

Pagetamil

யாழில் வீதிக்கு வந்த முதலைக்கு நேர்ந்த பரிதாபம்

Pagetamil

Leave a Comment