ஸ்பெயின் பொதுத்தேர்தலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தெளிவான முடிவு கிடைக்கவில்லை. தொங்கு பாராளுமன்றம் அமையும் சூழலே ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11:45 மணிக்கு (21:45 GMT) 99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கன்சர்வேடிவ் எதிர்க்கட்சியான மக்கள் கட்சி (PP) 136 இடங்களையும், பிரதம மந்திரி Pedro Sanchez இன் ஆளும் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (PSOE) 122 இடங்களையும் பெற்றிருந்தது.
கிங்மேக்கர்களாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கொண்ட தீவிர வலதுசாரி வோக்ஸ் 33 இடங்களிலும், தீவிர இடதுசாரி சுமர் 31 இடங்களிலும் முன்னிலை பெற்றன.
பாலின வன்முறை, LGBTQ உரிமைகள், கருக்கலைப்பு மற்றும் கருணைக்கொலை பற்றிய சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான ஒரு தளத்தில் பிரச்சாரம் செய்த வோக்ஸ் கட்சி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 19 இடங்களை இழந்துள்ளது.
சான்செஸின் சோசலிஸ்டுகள் மற்றும் கூட்டணி கட்சிகள் மொத்தம் 172 இடங்களைப் பெற்றுள்ளன. அதே நேரத்தில் ஆல்பர்டோ நுனெஸ் ஃபீஜூவின் மக்கள் கட்சி மற்றும் பங்காளிகளை கொண்ட வலது அணி 170 இடங்களைப் பெற்றிருக்கலாம்.
இதனால் ஸ்பெயின் மீண்டும் ஒருமுறை, அரசியல் குழப்பத்தில் சிக்கியுள்ளது.
ஓகஸ்ட் 17-ம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடிய பிறகு அரசு அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும்.