யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த கடுகதி புகையிரதமும், லொறியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வவுனியா, திருநாவற்குளம், 3ம் ஒழுங்கை பகுதியில் அமைந்துள்ள புகையிரத கடவையை லொறி கடக்க முயன்ற போது புகையிரதத்துடன் லொறி மோதி விபத்துக்குள்ளானது.
லொறியில் பயணித்த சாரதியுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தாண்டிக்குளம் பகுதியை சேர்ந்த இருவரே படுகாயமடைந்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1