மாற்று மத இளைஞனை காதலித்து ஓடிப்போன தங்கையின் தலையை வெட்டியெடுத்த அண்ணன், தலையுடன் நடந்து சென்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் மித்வாரா கிராமத்தில் இந்த ஆணவக் கொலை நடந்துள்ளது.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆசிபாவும் (18) அதே கிராமத்தில் இந்து மதத்தை சேர்ந்த சந்த் பாபு என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதையடுத்து, ஆசிபாவின் குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிபாவையும் அவரது காதலன் சந்த் பாபுவையும் கண்டுபிடித்தனர். ஆசிபாவை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீசார் சந்த் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மாற்று மதத்தை சேர்ந்த நபரை காதலித்து அவருடன் வீட்டை விட்டு வெளியேறியது தொடர்பாக ஆசிபாவுக்கும் அவரது அண்ணன் ரியாசுக்கும் (22) இடையே நேற்று முன்தினம் (21) வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரியாஸ் வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் தங்கை ஆசிபாவின் கழுத்தை வெட்டியுள்ளார்.
பின்னர் வெட்டி எடுத்த ஆசிபாவின் தலையுடன் வீட்டில் இருந்து பொலிஸ் நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், பொலிசாருக்கு தகவலளித்தனர். விரைந்து செயற்பட்ட பொலிசார், ரியாஸ் பொலிஸ் நிலையம் வந்து சேர்வதற்குள் வீதியில் வைத்தே மடக்கிப் பிடித்தனர்.
பின்னர், வீட்டிலிருந்த ஆசிபாவின் தலையில்லா உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
What this man is carrying in his hand is not a bag but chopped head of his sister. Riyaz was angry at her for eloping with her boyfriend (same religion, same caste). So Riyaz beheaded her. He walked on the road carrying the head for long before police held him. Incident from UP’s… pic.twitter.com/zQORKcxmtq
— Swati Goel Sharma (@swati_gs) July 21, 2023