விம்பிள்டன் டென்னிசின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ்.
இன்று நடந்த இரண்டாவது அரையிறு ஆட்டத்தில் மூன்றாம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெட்வடேவை 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அல்கராஸ் வீழ்த்தினார்.
நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் செர்பிய சூப்பர் ஸ்டார் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார் கார்லோஸ் அல்கராஸ்.
நாளைய போட்டியில் ஜோகோவிச் வென்றால், ஒட்டுமொத்தமாக அவரது கிராண்ட்ஸ்லாம் பட்டம் 24 ஆக உயரும். அத்துடன், 8வது விம்பிள்டன் பட்டமாகவும், தொடர்ந்து 5வது விம்பிள்டன் பட்டமாகவும் அமையும்.
மறுவளமாக 20 வயதான கார்லோஸ் அல்கராஸ் வென்றால், அவரது 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1