30.5 C
Jaffna
April 13, 2025
Pagetamil
குற்றம்

20 வயது காதலிக்கு போதையூட்டி உல்லாசம் அனுபவித்த காதலனுக்கு வலைவீச்சு!

20 வயதான யுவதியை போதைப்பொருளுக்கு அடிமையாக்கி, உடலுறவு கொண்ட காதலனை பொலிசர் தேடி வருகின்றனர்.

22 வயதான  காதலன், பல சந்தர்ப்பங்களில் போதைப்பொருளை பயன்படுத்த கொடுத்த சம்பவம் தொடர்பில் அந்த யுவதி, யுவதியின் தாய், உறவினர்கள் வெலிபென்ன பொலிஸ் நியைத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தர்கா நகர் மீகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட, தற்போது தலைமறைவாகியிருக்கும் 22 வயதான நபர், கடந்த பல மாதங்களாக இந்த யுவதியுடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார்.

அப்போது அந்த யுவதியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, ஹெரோய்ன் போதைப்பொருளை பயன்படுத்த பலவந்தமாக பழக்கப்படுத்தினார் என்று அந்த யுவதி பொலிஸில் தெரிவித்துள்ளார்.

கண்ணாடி குவளைலைக்குள் போதைப்பொருளை போட்டு, ஏதோவொரு குழாயை தன்னிடம் கொடுத்து, அந்த கண்ணாடி குவலையின் கீழ், லைட்டர் அல்லது தீக்குச்சிகளாக தீமூட்டுவார். அதன்பின்னர், வெளிவரும் புகையை மூக்கில் இழுக்குமாறு வற்புறுத்துவார். இவ்வாறுதான் தனக்கு​ ஹெரோய்ன் பயன்படுத்த பலவந்தமாக பழக்கப்படுத்தினார் என்றும் அந்த யுவதி தெரிவித்துள்ளார்.

போதையில் இருக்கும் போது, பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்துவார் என்றும் அந்த யுவதி தெரிவித்துள்ளார். தற்போது தான் போதைக்கு அடிமையாகி விட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து யுவதி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

காதலனை பொலிசார் தேடி வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்

தந்தையும், மகனும் குத்திக்கொலை!

Pagetamil

மசாஜ் நிலைய அழகியில் காதல் கொண்ட இருவர்; பின்னர் நடந்த கொடூர குற்றம்: யுவதி உள்ளிட்ட 4 பேர் கைது!

Pagetamil

3வது காதலா?: 2வது காதலனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் நிகழ்ந்த விபரீதம்!

Pagetamil

15 வயது சிறுமியின் கழுத்தில் கத்தி வைத்து பாலியல் பலாத்காரம்

Pagetamil

தொலைபேசியில் அறிமுகமான 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய நடத்துனர் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!