25.5 C
Jaffna
December 24, 2024
Pagetamil
கிழக்கு

சாய்ந்தமருது பொலிஸ் நிலையம், அரச நிறுவனங்கள் உரிய இடங்களுக்கு மாற்ற குழு அமைப்பு

தற்காலிகமான கட்டடங்களில் இயங்கி வருகின்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் உட்பட பல அரச நிறுவனங்களை நிரந்திரமான இடங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கான பொருத்தமான இடங்கள் மற்றும் கட்டடங்களை இனங்காண்பதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையானது சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் நெறிப்படுத்தலில் புதன்கிழமை (12) புதன்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற வேளை இக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இக்குழுவானது சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் உட்பட அரச நிறுவனங்கள் நிரந்திரமாக அமைக்கப்பட வேண்டிய இடங்களை ஆராயவுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் கடந்தகால மற்றும் நிகழ்கால அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் தோனா அபிவிருத்திஇ புதிய மையவாடி நிர்மனித்தல் சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் உட்பட அரச நிறுவனங்கள் நிரந்திர கட்டங்களுக்கு மாற்றுதல் உட்பட சமகால அபிவிருத்தி செயல்முறை தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, கணக்காளர் நுஸ்ரத் பானு, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஏ. ஹிபதுல் கரீம் , சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், திணைக்களங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் தற்போது சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் இயங்கி வருகின்ற இடம் கடந்த காலங்களில் போதைப்பொருள் பாவனையாளர்களினால் பயன்படுத்தப்பட்டு வந்திருந்த நிலையில் பல தரப்பினரின் வேண்டுகோளிற்கமைய துப்பரவு செய்யப்பட்டு புதிய பொலிஸ் நிலையமாக 2021.11.29 அன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதியில் உள்ள கடற்கரை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனைகள் குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அதிக ஞாபகத்திறன் கொண்ட 4 வயது சிறுவன்

east tamil

மியன்மார் அகதிகளை மிரிஹானவில் தடுத்து வைக்க தடை

east tamil

விருதுகள் வழங்கப்பட்டது ஏன்?

east tamil

மதுபானசாலையில் வாள்வெட்டு

east tamil

வாழைச்சேனையில் கிராமசேவகர் தாக்கப்பட்டதற்கு எதிராக போராட்டம்

Pagetamil

Leave a Comment