மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதிப்படுத்தியுள்ளார்.
அடுத்த வாரம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலத்திரனியல் பொருட்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் ஜூன் 9 ஆம் திகதி நீக்கப்பட்டன.
இது தொடர்பான வர்த்தமானியை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நாயகம் வெளியிட்டுள்ளார்.
அதற்கமைவாக இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட பொருட்களின் எண்ணிக்கை 1,216 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சுமார் 4,000 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், 3,000 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அவர்களால் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாது என்றும், கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட செயல் தவிர்க்க முடியாது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
அனைத்து முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் பரிசீலிப்பதாகவும், ஆனால் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இலங்கை மத்திய வங்கியின் தீர்மானத்தின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வலியுறுத்தினார்.