Pagetamil
இலங்கை

சரத் வீரசேகரவின் வில்லங்க பேச்சுக்கு எதிர்ப்பு: வடக்கில் நாளை சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!

வடமாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை முன்னிலையாகாமல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதென வடமாகாண சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் தமிழ் பௌத்த வழிபாட்டு எச்சங்களின் மீது, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள சிங்கள பௌத்த கட்டுமானங்களை பார்வையிட முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அண்மையில் சென்றிருந்தார்.

அப்போது தனது குழுவினருடன் அங்கு வந்திருந்த பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேக, தேவையில்லாமல் மூக்கை  நுழைத்து வாங்கிக் கட்டினார். அரசியல்வாதிகள் நீதிமன்ற விசாரணையில் மூக்கை நுழைக்கக்கூடாது என எச்சரித்து வீரசேகரவை அங்கிருந்து அகற்றினார்.

இதனால் கொதிப்படைந்த வீரசேக, அண்மையில் நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி, நீதித்துறையிலுள்ள தமிழர்களிற்கு மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நாளை வட மாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருக்க வடமாகாண சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், நாளை காலை 9.30 மணிக்கு வடக்கிலுள்ள சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு எதிரில் ஒன்றுகூடி ஆர்ப்பா்டமொன்றிலும் ஈடுபடுவார்கள்.

இதையும் படியுங்கள்

சிஐடியில் மைத்திரி

Pagetamil

உள்ளூராட்சி வேட்புமனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சங்கு அணி மனு!

Pagetamil

சாமர சம்பத் நீதிமன்றத்தில்

Pagetamil

சிஜடியிலிருந்து வெளியேறிய நாமல்

Pagetamil

மனைவி, தம்பி சிறை சென்றதால் அரசியலை கைவிடப் போவதில்லை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!