25.5 C
Jaffna
December 13, 2024
Pagetamil
உலகம் தொழில்நுட்பம்

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

ருவிட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் இன்று அறிமுகமானது. உலக அளவில் நாளை த்ரெட்ஸ் பயன்பாட்டுக்கு கிடைக்கும்.

இந்த ஆப்ஸ் ஆரம்பத்தில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஜப்பான் உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கும். ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சின் பின்னரே அங்கு பயன்பாட்டுக்கு வரும்.

கடந்த மே மாதம் முதல் ருவிட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை மெட்டா உருவாக்கி வருகிறது என சொல்லப்பட்டு வந்தது. இந்த சூழலில் தற்போது அது உறுதியாகி உள்ளது. மெட்டா நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என மூன்று சமூக வலைதளங்களை தன்வசம் வைத்துள்ளது. இந்த மூன்று தளங்களும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பயனர்களால் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், கடந்தாண்டு ருவிட்டரை விலைக்கு வாங்கினார். அதன்பின் அந்த தளத்தில் அதிரடி மாற்றங்களை முன்னெடுத்தார். ஊழியர்களை பணி நீக்கம் செய்தது, ப்ளூ டிக் கட்டண சந்தா என அது நீள்கிறது. அண்மையில் ருவிட்டர் பயனர்கள் ட்வீட்களை பார்ப்பதற்கு புதிய வரம்பு ஒன்றும் நிர்ணயிக்கப்பட்டது. இது பயனர்களை விரக்தி அடைய செய்தது.

அதே நேரத்தில் ருவிட்டருக்கு மாற்றாக தளங்களை உருவாக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். கூ, ஸ்பில், ப்ளூ ஸ்கை என பல மாற்றுகள் உள்ளன. ஆனால், முதல் முறையாக மெட்டா போன்ற பெரிய நிறுவனம் ருவிட்டருக்கு மாற்றை அறிவித்துள்ளது.

இந்த தளம் ருவிட்டரை போலவே முற்றிலும் டெக்ஸ்ட்களை அடிப்படையாக வைத்து இயங்கும் தளம்.

இடுகைகள் 500 எழுத்துகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ருவிட்டரில் 280 எழுத்துக்களே பயன்படுத்தலாம். மேலும், ஐந்து நிமிடங்கள் வரை நீளமான இணைப்புகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உள்ளடக்கலாம்.

இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களின் தற்போதைய பயனர் பெயர்களுடன் உள்நுழைய முடியும். புதிய பயன்பாட்டில் அதே கணக்குகளைப் பின்பற்ற முடியும். புதிய பயனர்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை அமைக்க வேண்டும்.

இன்ஸ்டாகிராமின் சமூக வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துதல் மற்றும் பயனர்களை யார் குறிப்பிடலாம் அல்லது அவர்களுக்குப் பதிலளிக்கலாம் என்பதைக் கட்டுப்படுத்துவதற்கான கருவிகளை வழங்குதல் உள்ளிட்ட பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை மெட்டா வலியுறுத்தியது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தென்கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை முயற்சி

Pagetamil

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

east pagetamil

சிரியா ஜனாதிபதி மொஸ்க்கோவில் தஞ்சம்

east pagetamil

14 வயது சிறுவனால் வரையப்பட்ட ஓவியம் – கவிழ்க்கப்பட்டது சிரியா ஆட்சி

east pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

Leave a Comment