Pagetamil
இலங்கை

மத்திய வங்கியின் வட்டி வீதம் குறைப்பு!

மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று (05) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனபடி, நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை 200 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 11 சதவீதம் மற்றும் 12 சதவீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டரீதியான கையிருப்பு வீதத்தை நிலவும் 4.00% அளவிலேயே பேணுவதற்கு நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

இதேவேளை, கடந்த மே மாதம் 31 ஆம் திகதியன்று, இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தனது கொள்கை வட்டி வீதங்களை பாரியளவில் குறைக்க தீர்மானித்திருந்தது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் முறையே 250 அடிப்படை புள்ளிகளால் 13.00 சதவீதம் மற்றும் 14.00 சதவீதம் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்!

Pagetamil

இலங்கையின் ஒற்றைக்கண் சிறுத்தையின் புகைப்படத்தை மோடிக்கு பரிசளித்த சஜித்!

Pagetamil

மோடியின் இலங்கை வருகை: புதிய காட்சிகளும் கவனிக்க வேண்டிய யதார்த்தங்களும்

Pagetamil

குனிந்து காட்டிய அநாகரிகம்… வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்!

Pagetamil

அனுர, மோடி திறந்து வைத்த திட்டங்கள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!