நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் இன்றும் நாளையும் மூடப்படும்.
பிரதேசத்தில் நிலவும் காலநிலையை கருத்தில் கொண்டு அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக நுவரெலியா கல்வி வலயத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் இன்றும் நாளையும் மூடப்படும் என அட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் நேற்றும் மூடப்பட்டிருந்தன. கடந்த சில நாட்களாக ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் படி, தென்கிழக்கு மாகாணத்தில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1