தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோத சுரங்கத்தில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தல் 16 பேர் உயிரிழந்தனர்.
ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கே போக்ஸ்பர்க் மாவட்டத்திற்கு அருகில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
“அவசர சேவைகளுக்கு இரவு 8 மணியளவில் (1800 GMT) அழைப்பு வந்தது, இது ஒரு எரிவாயு வெடிப்பு என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் வந்தவுடன் அது விஷ வாயு சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிவினால் ஏற்பட்ட விபத்து என்பது தெரிய வந்தது“ என அவசர சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாக அவர் கூறினார்.
“சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக” எரிவாயு பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.