25.1 C
Jaffna
January 18, 2025
Pagetamil
மலையகம்

காதலனுடன் விடுதிக்கு வந்த தமிழ் யுவதி சடலமாக மீட்பு: நடந்தது என்ன?

ரக்வான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனாவல பகுதியில் விடுதியொன்றில் தனது காதலனுடன் தங்கச் சென்ற 22 வயது யுவதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நேற்று திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

யுவதி  தூக்குப்போட்டு இறந்ததாக காதலன் கூறியதாகவும், ஆனால் அதில் சந்தேகம் இருப்பதாகவும்  யுவதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

கஹவத்தை ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி எம்.டி.எம்.எஸ்.கே. திஸாநாயக்க நேற்று (5) பிற்பகல் தனது தீர்மானத்தை வழங்கினார். யுவதியின் உடல் உறுப்புகள் மேலதிக பரிசோதனைக்கு அனுப்பப்படும்.

ரக்வான பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் பிரதீபா என்பவரின் மர்ம மரணம் தொடர்பில் ரக்வான பதில் நீதவான் சரத் விஜயகுணவர்தனவின் உத்தரவின் பிரகாரம் இந்த பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

உயிரிழந்த யுவதி, கடந்த 04ஆம் திகதி மதியம் மாதம்பே, பனாவல வீதியில் அமைந்துள்ள விடுதிக்கு தனது காதலனுடன் வந்து அங்கு அறையொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரக்வான பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே காதலன் என பொலிஸார் தெரிவித்தனர்.

அன்று இரவு விடுதியை விட்டு வெளியே சென்றதாகவும், திரும்பி வந்தபோது காதலி இறந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தனது காதலியிடம் பசியாக இருப்பதாக கூறியதாகவும், உணவு வாங்கி வருமாறு தனது வங்கி அட்டையை அவரிடம் கொடுத்ததாகவும் காதலன் ரக்வான பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விடுதி அறைக்கு வந்தபோது கதவு மூடப்பட்டிருந்ததாகவும், கதவை தட்டியபோதும் காதலி கதவைத் திறக்காததால், அப்போது விடுதிக்குப் பொறுப்பாக இருந்த பெண்ணிடம் தெரிவித்ததாகவும் காதலன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அறையின் பின்பகுதியில் உள்ள ஜன்னலை உடைத்து அறைக்குள் நுழையுமாறு பெண் கூறியபடி, அறைக்குள் நுழைந்த போது, ​​தான் அணிந்திருந்த சல்வாரின் துப்பட்டாவினால் தூக்கிட்டு காதலி தற்கொலை செய்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

தூக்கிலிருந்து காதலியை இறக்கி முச்சக்கர வண்டியில் ஏற்றி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அப்போது காதலி அறையில் மயங்கி விழுந்து விட்டதாக விடுதிக்கு பொறுப்பாக இருந்த மேலாளரிடம் காதலன் கூறியதாக, மேலாளர் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

யுவதியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் போது இளைஞனின் முச்சக்கரவண்டி நடுவழியில் நின்றதையடுத்து, மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும், காதலனும் பொய் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யுவதியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, அவர் சுயநினைவின்றி இருப்பதாகவும் அந்த இளைஞன் வைத்தியசாலையில் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் காதலர் ஒவ்வொருவரிடமும் முன்னுக்குப்பின் முரணான வாக்குமூலங்களை அளித்துள்ளதாகவும் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரக்வான பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த யுவதி தாதியர் கற்கைநெறியை முடித்து தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்னர் அந்த பணியிலிருந்து வெளியேறியதாக அவரது தந்தை தெரிவித்தார்.

வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டதால் உயிரிழந்த பெண்ணின் காதலன் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகிழுந்து-பேருந்து விபத்து

east tamil

மவுஸ்ஸாக்கலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து

Pagetamil

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

east tamil

விபத்தில் இரு மாணவர்கள் பலி

east tamil

4 வயது குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் குதித்த தாய்

Pagetamil

Leave a Comment