உலகக்கிண்ண தகுதிச்சுற்றில் ஓமானை வீழ்த்தி, ஆறுதல் வெற்றியீட்டியுள்ளது மேற்கிந்தியத்தீவுகள் அணி.
இந்தியாவில் நடைபெறள்ள உலகக்கிண்ணத்துக்கு மேற்கிந்தியா தகுதி பெறவில்லை. 48 வருடகால உலகக்கிண்ண வரலாற்றில் மேற்கிந்தியத்தீவுகள் இல்லாமல், இம்முறை தொடர் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், முக்கியத்துமற்ற இன்றைய ஆட்டத்தில் ஓமானை 7 விக்கெட்டுக்களால் மேற்கிந்தியத்தீவுகள் வெற்றி பெற்றுள்ளது.
நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் ஆடிய ஓமான் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 221 ஓட்டங்களை பெற்றது. சொஹைப் கான் 50 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் ரொமாரியோ செப்பேர்ட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
39.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களை பெற்று மேற்கிந்தியத்தீவுகள் வெற்றியீட்டியது. பிரண்டன் கிங் 100, சாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களை பெற்றனர்.