திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அருணாசலம் தங்கத்துரை அவர்களின் 26வது நினைவுநாள் அஞ்சலி நிகழ்வு இன்று (05) கிளிவெட்டியில் இடம்பெற்றது.
இதன்போது கடந்த வருடம் மக்களால் நிர்மானிக்கப்பட்ட நினைவுச் சிலைக்கு தமிழரசுக் கட்சியின் மூதூர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் சி.துரைநாயகம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதேவேளை கிளிவெட்டி மகா வித்தியாலயத்தின் அதிபர், பாடசாலையின் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தியதையும் காணக் கூடியதாக இருந்தது.
-அப்துல்சலாம் யாசீம்-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1